search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்க பரிசீலனை
    X

    கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்க பரிசீலனை

    கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் இயக்க ரெயில்வே துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Train #Kanyakumariexpress

    சென்னை:

    கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரெயில்களில் மிக முக்கிய மதிப்புமிக்க நம்பகமான சூப்பர் பாஸ்டு ரெயில் ஆகும்.

    இந்த ரெயிலில் நாகர் கோவிலில் இருந்து தினசரி சராசரியாக 1000 நபர்கள் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் ஐம்பது சதவீதம் இந்த ரெயில் மூலமாக கிடைத்து வருகிறது.

    இந்த ரெயில் கடந்த ஒரு வருடங்களாகவே காலதாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரெயில் குமரி மாவட்ட மக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த நம்பகதன்மையை இழந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் விருதுநகர் வரை உள்ள பகுதி மக்களுக்கு சென்னை செல்ல முதலில் சென்னை சென்று சேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்தான் முதல் தேர்வாக உள்ளது.

    இதனால் மற்ற ரெயில்களை காட்டிலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூட்டம் அலை மோதுகிறது. இதற்கு காரணம் இந்த ரெயில் முதலில் செல்லும் நம்பகமான சூப்பர் பாஸ்டு ரெயில் ஆகும்.

    கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பெங்களுர்- கன்னியாகுமரி ரெயில்கள் தனித்தனி ரெயில்களாக இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலையில் கன்னியாகுமரி வந்துவிட்டு நாகர்கோவிலுக்கு தண்ணீர் பிடிப்பதற்கு வேண்டி வந்து விட்டு காலையிலிருந்து மாலைவரை நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

    இதைப்போல் பெங்களூரிலிருந்து புறப்படும் கன்னியாகுமரி-ஐலண்ட்டு எக்ஸ்பிரஸ் ரெயிலும் மாலையில் கன்னியாகுமரிக்கு வந்து விட்டு மறுநாள் காலை 9 மணிவரை நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாறு இரண்டு ரெயில்களும் நிறுத்திவைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக வேண்டி கடந்த 2014ம் ஆண்டு முதல் இரண்டு ரெயில்களையும் இணைத்து சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு அதிகாலை 06:50க்கு கன்னியாகுமரிக்கு வந்து சேரும் சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் காலிபெட்டிகள் கன்னியாகுமரி-பெங்களுர் ரெயிலாக கன்னியாகுமரியிலிருந்து 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லு மாறும் மறுமார்க்கம் பெங்களுரிலிருந்து கன்னியாகுமரி வரும் ஐலண்ட்டு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கன்னியாகுமரியிலிருந்து சென்னை மார்க்கமாக கன்னியாகுமரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலாக புறப்பட்டு செல்லு மாறும் இயக்கப்பட்டது.

    இவ்வாறு இயக்கப்படுவதால் தினசரி பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு செட் ரெயில் பெட்டிகள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நிலவி வந்த இடநெருக்கடி ஓரளவுக்கு குறைக்கப்படுகிறது.

    இவ்வாறு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிக நாட்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வந்துது.

    இதனால் குமரி மாவட்ட பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் இந்த ரெயில் இயக்க தேவையாக பெங்களுரிலிருந்து கன்னியாகுமரி வரும் ரெயில் தாமதமாக வந்த காரணத் தாலேயே காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் குமரி மாவட்ட பயணிகள் இந்த இணைப்பு ரெயில் திட்டத்தை ரத்து செய்து முன்பை போல தனித்தனி ரயில்களாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன்பலனாக தற்போது ரெயில்வேத்துறை இந்த திட்டத்தை ரத்து செய்து தனித்தனி ரயில்களாக இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அவ்வாறு தொழில்நுட்ப காரணங்களுக்காக அமல்படுத்த முடியவில்லையென்றால் ஆகஸ்டு மாதம் 15ம் தேதி புதிய ரெயில்கால அட்டவணை வெளியிடப்படுகிறது.

    இந்த காலஅட்டவணையில் இந்த ரெயில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

    Next Story
    ×