search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்ப்பாக்கம்-தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி கண் ஆஸ்பத்திரிகளுக்கு நவீன கருவிகள்- அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    கீழ்ப்பாக்கம்-தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி கண் ஆஸ்பத்திரிகளுக்கு நவீன கருவிகள்- அமைச்சர் விஜயபாஸ்கர்

    ரூ.3.25 கோடி மதிப்பில் கீழ்ப்பாக்கம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கண் சிகிச்சை பிரிவுகளுக்கு அதிநவீனக் கருவிகள் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    சென்னை:

    சென்னை அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு துவக்க விழா மற்றும் கண் விபத்து சிகிச்சை கருத்தரங்கம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

    விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தொன்மையான மருத்துவமனைகளில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலும் உலக அளவில் 2-வது இடத்திலும் உள்ளது.

    முதன் முதலில் 1891-ல் சிறிய மருத்துவமனையாக சென்னை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1844-ம் ஆண்டு முதல் எழும்பூருக்கு மாற்றப்பட்டது. டாக்டர் கிரிக் பேட்ரிக் என்பவரால் மெட்ராஸ் ஐ எனும் நோய் இந்த மருத்துவமனையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ரூ.5.12 கோடி மதிப்பில் 32 மாவட்டங்களில் உயர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன உபகரணங்கள் வழங்கி சர்க்கரை நோய் பாதிப்புகள் பரிசோதிக்கப்படும்.

    ரூ.5 கோடி மதிப்பில் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவமனை பிரிவுகள் நவீனப்படுத்தப்படும்.

    ரூ.3.25 கோடி மதிப்பில் கீழ்ப்பாக்கம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கண் சிகிச்சை பிரிவுகளுக்கு அதிநவீனக் கருவிகள் வழங்கப்படும்.

    ரூ.1.64 கோடி மதிப்பீல் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கென தனிப்பிரிவு அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். #TNMinister #Vijayabaskar
    Next Story
    ×