search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை தொடங்கியது
    X

    சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை தொடங்கியது

    மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த புகாரில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். #AruppukottaiProfessor #NirmalaDevi
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

    பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக் குழுவை ஆளுநர் அமைத்துள்ளார். இந்த 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் நிர்மலா தேவியை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விருதுநகருக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர்.



    பேராசிரியை நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தாலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ள தனக்கு எந்த தடையுமில்லை என விசாரணை அதிகாரி சந்தானம் கூறியுள்ளார். இந்த  விவகாரம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார். எனவே, அதிகாரி சந்தானமும் நிர்மலா தேவியிடம் விரைவில் விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  #AruppukottaiProfessor #NirmalaDevi

    Next Story
    ×