search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வாளர்களின் போன் அழைப்புக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்: கிறிஸ் வோக்ஸ்
    X

    தேர்வாளர்களின் போன் அழைப்புக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்: கிறிஸ் வோக்ஸ்

    உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளீர்கள் என்று தொலைபேசி அழைப்பு வரவேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் அவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    போட்டியை நடத்தும் இங்கிலாந்து வலுவான அணியாக திகழ்கிறது. அந்த அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இங்கிலாந்து அறிவித்திருந்தது. வரும் 23-ந்தேதிக்குள் வீரர்களை மாற்றிக்கொள்ள முடியும். இதனால் இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணியின் கேப்டன் மோர்கன் இதுவரை 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் குறித்து எந்த செய்தியையும் கசியவிடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ள 17 பேரும் அபாரமாக விளையாடினர். இதனால் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.



    இந்நிலையில் தேர்வாளர்களின் போன் அழைப்புக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் தேர்வுக்குழுவின் போன் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உறுதியாக இடம் கிடைக்கும் என்றாலும், அவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வரும் வரை உறுதி கிடையாது’’ என்றார்.
    Next Story
    ×