search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே-யை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
    X

    ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே-யை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னையை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 10 ஆட்டத்தில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது.

    இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி இந்த சீசனில் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 11 ஆட்டத்தில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் சென்னை சிஎஸ்கே அணியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.



    இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தினால் சென்னை மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும். மும்பை இந்தியன்ஸ் 10 ஆட்டத்தில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    ஐதராபாத் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கொல்கத்தா 10-ல் நான்கில் வெற்றி பெற்று 6-வது இடத்திலும் உள்ளது.
    Next Story
    ×