search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் குர்ரான் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை
    X

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் குர்ரான் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை

    ஐ.பி.எல். போட்டியில் ‘ஹாட்ரிக்‘ விக்கெட் எடுத்து சாதனை புரிந்த 15-வது வீரர் என்ற பெருமையை பஞ்சாப் அணி வீரர் சாம் குர்ரான் பெற்றார். #SamCurran #IPL
    டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி வீரர் சாம் குர்ரான் ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தார்.

    இங்கிலாந்தை சேர்ந்த அவர் 18-வது ஓவரில் கடைசி பந்தில் ஹர்‌ஷல் படேலை அவுட் செய்தார். கடைசி ஓவரின் முதல் 2 பந்தில் ரபடா, லமிச்சனேயை ‘போல்டு’ ஆக்கினார்.

    இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் 3 பந்தில் 3 விக்கெட் கைப்பற்றி ‘ஹாட்ரிக்‘ சாதனை புரிந்த 15-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த ஐ.பி.எல்.லில் முதல் ஹாட்ரிக் ஆகும். ஒட்டு மொத்த போட்டிகளில் 18-வது ஹாட்ரிக் நிகழ்வாகும்.

    ஐ.பி.எல்.லில் ‘ஹாட்ரிக்‘ சாதனை படைத்த வீரர்கள் விவரம்:-

    அமித் மிஸ்ரா ( 3 தடவை), யுவராஜ்சிங் (2 முறை), எல்.பாலாஜி, நிதினி, ரோகித் சர்மா, பிரவீண்குமார், அஜீத் சண்டிலா, சுனில் நரேன், பிரவீன் தாம்பே, வாட்சன், அக்‌ஷர் பட்டேல், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரூ டை, ஜெயதேவ் உனட்கட், குர்ரான் (தலா 1 தடவை). #SamCurran #IPL
    Next Story
    ×