search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது நபி சுழலில் சிக்கி தடம் புரண்டது ஆர்சிபி- 113 ரன்னில் சுருண்டு படுதோல்வி
    X

    முகமது நபி சுழலில் சிக்கி தடம் புரண்டது ஆர்சிபி- 113 ரன்னில் சுருண்டு படுதோல்வி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் 113 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. #IPL2019 #SRHvRCB
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் வார்னர் (100 அவுட் இல்லை), பேர்ஸ்டோவ் (114) ஆகியோரின் சதங்களால் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

    பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது. பார்தீவ் பட்டேல், ஹெட்மையர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பார்தீவ் பட்டேல் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    4-வது ஓவரின் முதல் பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட்மையர் ஸ்டம்பிங் ஆனார். இதே ஓவரின் 4-வது பந்தில் ஏபி டி வில்லியர்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். ஐந்து பந்தில் முன்னணி பேட்ஸ்மேன்களை சாயத்தார். முகமது நபி.



    மெகா இலக்கை நோக்கிச் செல்லும்போது நான்கு ஓவர்களுக்குள்ளேயே 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடம் புரண்டது ஆர்சிபி. 3 ரன் எடுத்த நிலையில் விராட் கோலி சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 36 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.



    கொலின் டி கிராண்ட்ஹோம் 37 ரன்களும், பிரயாஸ் பர்மன் 19 ரன்களும் அடிக்க 113 ரன்னில் சுருண்டது. ஆர்சிபி. இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

    முகமது நபி 4 ஓவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் அள்ளினார். சந்தீப் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.
    Next Story
    ×