search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்தில் கிளப் போட்டியின்போது மோதல்: எதிரணி வீரரின் மூக்கை உடைத்தவருக்கு ஓராண்டு தடை
    X

    நியூசிலாந்தில் கிளப் போட்டியின்போது மோதல்: எதிரணி வீரரின் மூக்கை உடைத்தவருக்கு ஓராண்டு தடை

    நியூசிலாந்தில் நடைபெற்ற கிளப் போட்டியின்போது எதிரணி வீரரின் மூக்கை உடைத்த வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்தில் உள்ள கேனா கேனா பார்க்கில் கடந்த மாதம் 17-ந்தேதி வெராரோ - பரபராயுமு அணிகள் மோதின. போட்டியின்போது அணி வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    அப்போது வெராரோ அணியின் காலெப் ஓ'கானெல் எதிரணியைச் சேர்ந்த மெக் நமராவை தாக்கினார். இதில் மெக் நமராவின் மூக்கு உடைந்தது. இதனால் காலெப் ஓ'கானெலுக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூக்கு உடைபட்ட மெக்நமராவுக்கு நான்கு வாரங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    வெராரே அணியின் மற்றொரு வீரர் ஜேக் கலெட்டனுக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×