search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக்: பிஎஸ்ஜி-யை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்
    X

    சாம்பியன்ஸ் லீக்: பிஎஸ்ஜி-யை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்

    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. #UCL #ManUnited #PSG
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிகள் மோதின. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் பிஎஸ்ஜி 2-0 என வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் 2-வது லெக் பிஎஸ்ஜி-க்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் ரொமேலு லூக்காக்கு கோல் அடித்தார். அவர் கோல் அடித்த சிறிது நேரத்தில் ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் ஜுயன் பெர்னாட் வெலாஸ்கோ பதில் கோல் அடித்தார்.

    ஆனால் சிறப்பாக விளைாடிய மான்செஸ்டர் அணிக்கு 30-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தது. இந்தக் கோலையும் லூக்காக்குதான் அடித்தார். இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் பாதி நேரம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டு லெக்கிலும் சேர்த்து பிஎஸ்ஜி 3-2 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியது. மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பிஎஸ்ஜி வீரர்கள் கோல் ஏதும் விட்டுக்கொடுக்காமல் அற்புதமாக விளையாடினார்கள்.



    இதனால் 90 நிமிடம் வரை மான்செஸ்டர் அணியால் கோல் அடிக்க இயலவில்லை. காயம் மற்றும் விளையாட்டு நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதலாக இன்ஜுரி நேரம் கொடுக்கப்பட்டது. போட்டி முடிவடைவதற்கு சற்று முன் 4-வது நிமிடத்தில மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

    இதைப்பயன்படுத்தி மார்கஸ் ரஷ்போர்டு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் 2-வது லெக்கில் 3-1 என வெற்றி பெற்றிது. இரண்டு லெக்கிலும் சேர்த்து இரு அணிகளும் 3-3 என சமநிலைப் பெற்றது. ஆனால், பிஎஸ்ஜிக்கு சொந்தமான மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3 கோல் அடித்ததால் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×