search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் டி20 லீக்: சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்
    X

    பிக் பாஷ் டி20 லீக்: சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்

    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் சிட்னி சிக்ர்ஸ் அணியை வீழ்த்தி மெல்போர்ன் ரெனேகட்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிலிப், டேனியல் ஹியூக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிலிப் 31 பந்தில் 52 ரன்களும், ஹியூக்ஸ் 32 பந்தில் 52 ரன்களும் விளாசினர். வின்ஸ் 28 ரன்களும், ஹென்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் அடிக்க சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி களம் இறங்கியது. ஆரோன் பிஞ்ச் 44 ரன்களும், ஹார்பர் 36 ரன்களும், ஒயிட் 29 ரன்களும் சேர்த்தனர். கிறிஸ்டியன் ஆட்டமிழக்காமல் 14 பந்தில் 3 சிக்சருடன் 31 ரன்களும், ரிச்சர்ட்சன் 3 பந்தில் 9 ரன்களும் அடிக்க மெல்போர்ன் ரெனேகட்ஸ் 19.5 ஓவரில் 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×