search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரமான வீரர்கள் பற்றி இந்தியாவிற்கு கவலை இருக்காது: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்
    X

    தரமான வீரர்கள் பற்றி இந்தியாவிற்கு கவலை இருக்காது: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்

    சிறந்த ரிசர்வ் வீரர்கள் இருப்பதால் தரமான வீரர்கள் பற்றி இந்தியாவிற்கு கவலை இருக்காது என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். #TeamIndia
    கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த அணிகள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. மார்க் வாக் காலத்தில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக இருந்தது. ரிக்கி பாண்டிங் காலத்தில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக இருந்தது என்று கூறுவார்கள்.

    இந்திய அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னணி பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையிலும் ரிசர்வ் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி எப்போதும் சிறந்த அணிதான், தரமான வீரர்களை தேடும் நிலை ஏற்படக்கூடாது என்று பிசிசிஐ விரும்புகிறது.

    இந்நிலையில் இந்திய அணிக்கு தரமான வீரர்கள் பற்றி கவலையில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நான் முடிந்த வரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஆசைப்படுவேன். ஏனென்றால், வருங்கால இந்திய கிரிக்கெட் வீரர்கள் அங்குதான் ஒளிந்து கிடக்கிறார்கள்.

    நமது உளளூர் கிரிக்கெட் (domestic cricket) மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் சிறந்த திறமையுடைய வீரர்கள் பார்த்து வருகிறோம். அவர்களை நானும், எனது குழுவில் உள்ளவர்களும் தவறவிட விரும்பமாட்டோம். நாங்கள் பார்த்த போட்டிகளில் இருந்து சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு ஒன்றன்பின் ஒன்று என்ற அடிப்படையில் தயார் செய்து வைப்போம்.



    ஒரு காலக்கட்டத்தில் சிறப்பாக விளையாடிவிட்டு, தற்போது சிறந்த வீரர்களை கண்டுபிடிக்கும் மற்ற நாடுகளைப் போன்ற நிலையை நான் ஒருபோதும் விரும்பவில்லை. நானும் எனது குழுவில் உள்ள உறுப்பினர்களும் பதவியை விட்டு விலகும்போது, அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா வலிமையாக இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு சந்தோசமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ரிசர்வ் வீரர்களை சிறப்பாக வகையில் ஏற்படுத்தி இருப்பதால், தரமான வீரர்கள் அல்லது அடுத்த 10 வருடத்திற்கு மாற்று வீரர்களுக்கு எந்த கவலையும் இருக்காது’’ என்றார்.
    Next Story
    ×