search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 1980-களில் பயன்படுத்திய ஜெர்சிக்கு மாறிய ஆஸ்திரேலியா
    X

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 1980-களில் பயன்படுத்திய ஜெர்சிக்கு மாறிய ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1980-களில் பயன்படுத்தியது போன்ற ஜெர்சியை தற்போது இந்திய தொடரின்போது அறிமுகம் செய்துள்ளது.#AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிட்னியில் தொடங்குகிறது. பொதுவாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருநாள் போட்டியில் மஞ்சள் நிறத்திலான ஆடைகளை அணிந்து விளையாடுவார்கள்.



    சமீப காலமாக ஆஸ்திரேலியா அணி தோல்விமேல் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஜெர்சியை மாற்றியுள்ளது. 1980-களில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிந்திருந்த ஜெர்சியை போன்று தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
    Next Story
    ×