search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இதுவரை 1135 பந்துகள் சந்தித்து புஜாரா அபாரம்: ராகுல் டிராவிட் சாதனையை முறியடிப்பாரா?
    X

    இதுவரை 1135 பந்துகள் சந்தித்து புஜாரா அபாரம்: ராகுல் டிராவிட் சாதனையை முறியடிப்பாரா?

    ஆஸ்திரேலியா தொடரில் மூன்று சதங்கள் விளாசியுள்ள புஜாரா 1135 பந்துகளை சந்தித்து ராகுல் டிராவிட்டின் சாதனையை நெருங்கி வருகிறார். #Pujara
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வரும் புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த புஜாரா இன்று சிட்னி டெஸ்டிலும் சதம் விளாசி அசத்தினார். இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 250 பந்தில் 130 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.

    நிதானமாக விளையாடும் புஜாரா இதுவரை இந்தத் தொடரில் 1135 பந்துகள் சந்தித்துள்ளார். இதன்மூலம் 2014-15 தொடரில் விராட் கோலி (1093 பந்துகள்) படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் 1977-78-ல் கவாஸ்கர் (1032) படைத்திருந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.



    விஜய் ஹசாரே (1192 பந்துகள்) 1947-48-ல் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரே தொடரில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையில் 2-வது இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 2003-04 தொடரில் 1203 பந்துகள் சந்தித்து முதல் இடத்தில் உள்ளார்.

    புஜாரா முதல் இன்னிங்ஸ் மற்றும் 2-வது இன்னிங்சில் இன்னும் 69 பந்துகள் சந்தித்தால் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிப்பார்.
    Next Story
    ×