search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெல்போர்ன் மைதானத்தில் 37 ஆண்டுக்கு பிறகு வெற்றி: ‘பாக்சிங் டே’ டெஸ்டில் முதல் வெற்றி
    X

    மெல்போர்ன் மைதானத்தில் 37 ஆண்டுக்கு பிறகு வெற்றி: ‘பாக்சிங் டே’ டெஸ்டில் முதல் வெற்றி

    இந்திய அணி புகழ்மிக்க மெல்போர்ன் மைதானத்தில் 37 வருடத்திற்குப் பிறகு வெற்றி வாகை சூடியுள்ளது. #AUSvIND #ViratKohli #TeamIndia
    மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா 37 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு மெல்போர்னில் இந்தியா 12 டெஸ்டில் 2 வெற்றி, 8 தோல்வி, 2 டிரா பெற்று இருந்தது. 1978-ம் ஆண்டு பி‌ஷன்சிங் பெடி தலைமையிலும், 1981-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் தலைமையிலும் வென்றிருந்தது.



    தற்போது இம்மைதானத்தில் 37 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு வெற்றியை ருசித்து உள்ளது. மேலும் பாக்சிங் டே டெஸ்டை இந்தியா வென்றதே கிடையாது. தற்போது ‘பாக்சிங் டே’ டெஸ்டில் வெற்றி வாகை சூடியது
    Next Story
    ×