search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவரிடம் மோதலில் ஈடுபட்ட ஷாகிப் அல் ஹசனுக்கு அபராதம்
    X

    நடுவரிடம் மோதலில் ஈடுபட்ட ஷாகிப் அல் ஹசனுக்கு அபராதம்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது நடுவரிடம் மோதல் போக்கில் ஈடுபட்ட வங்காள தேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது.

    வங்காள தேச அணி பேட்டிங் செய்தபோது 14-வது ஓவரில், நடுவர் ஒரு பந்திற்கு வைடு கொடுக்கவில்லை. இதனால் ஷாகிப் அல் ஹசன் நடுவரை நோக்கி கத்தினார். அத்துடன் அவரிடம் சென்று நீண்ட நேரம் பேசினார். இதுகுறித்து நடுவர் புகார் செய்தார்.

    போட்டி முடிந்த பின்னர் ஷாகிப் அல் ஹசன் தனது தவறை ஒப்புக்கொண்டதால், 15 சதவிதம் அபராதத்துடன் தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 43 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் வங்காள தேசம் 129 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    Next Story
    ×