search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன், சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை
    X

    இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன், சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை

    இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டிற்கான ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த்தில் இன்றுடன் முடிவடைந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆக வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது.



    இதற்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்டில் இடம்பிடித்திருந்த 13 வீரர்கள் அப்படியே இடம்பிடித்துள்ளனர். அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பேட் கம்மின்ஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 4. மார்கஸ் ஹாரிஸ், 5. ஜோஸ் ஹசில்வுட், 6. டிராவிஸ் ஹெட், 7. உஸ்மான் கவாஜா, 8. நாதன் லயன், 9. மிட்செல் மார்ஷ், 10. ஷான் மார்ஷ், 11. டிம் பெய்ன் (கேப்டன்), 12. பீட்டர் சிடில், 13. மிட்செல் ஸ்டார்க்.
    Next Story
    ×