search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஸ்லெட்ஜிங்’ விளையாட்டின் ஒரு பகுதி: அது கட்டாயம் இருக்க வேண்டும்- முகமது ஷமி
    X

    ‘ஸ்லெட்ஜிங்’ விளையாட்டின் ஒரு பகுதி: அது கட்டாயம் இருக்க வேண்டும்- முகமது ஷமி

    வார்த்தைப் போர் விளையாட்டின் ஒரு பகுதி, அது கட்டாயம் இருக்க வேண்டும் என்று 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் சாய்த்த முகமது ஷமி தெரிவித்துள்ளார். #AUSvIND
    தென்ஆப்பிரிக்கா தொடரின்போது ஆஸ்திரேலியா அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இந்த விவகாரத்தால் பான்கிராப்ட் 9 மாதம் தடையும், வார்னர் மற்றும் ஸ்மித் 12 மாதத்தடையும் பெற்றுள்ளனர்.

    இந்த பிரச்சினையால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு களங்கம் ஏற்பட்டதாக நிர்வாகிகள் எண்ணினார்கள். இதனால் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடரின்போது வீரர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

    அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது ஸ்லெட்ஜிங் ஏதும் இல்லை. ஆனால் தற்போது பெர்த்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். பொதுவாக இரு அணி கேப்டன்களான டிம் பெய்ன் மற்றும் விராட் கோலி ஒருவருக்கொருவர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்குநேர் மோதும் சூழ்நிலைக்கூட ஏற்பட்டது. நடுவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.



    இன்று ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது, மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் இழக்கவில்லை. உணவு இடைவேளைக்குப்பிறகு முகமது ஷமி அபாரமாக பந்து வீசினார். ஒரு கட்டத்தில் 192 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுக்கள் என இருந்த ஆஸ்திரேலியா, 207 ரன்னிற்குள் 9 விக்கட்டுக்களை இழந்தது. 5 விக்கெட்டில் நான்கு விக்கெட்டுக்களை ஷமி சாய்த்தார்.

    இவரது பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இன்றைய ஆட்டத்திற்குப்பின் முகமது ஷமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘ஸ்லெட்ஜிங் விளையாட்டின் ஒரு அங்கம். அது கட்டாயம் இருக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×