search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 சிக்சருடன் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்தார் குருணால் பாண்டியா
    X

    6 சிக்சருடன் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்தார் குருணால் பாண்டியா

    பிரிஸ்பேன் போட்டியில் 6 சிக்சருடன் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை குருணால் பாண்டியா படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடனும், குல்தீப் யாதவ், குருணால் பாண்டியா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளருடனும் களம் இறங்கியது.

    பும்ரா, புவி, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசிய போதிலும் குருணால் பாண்டியா, கலீல் அகமது பந்தை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விளாசினார்கள். கலீல் அகமது 3 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் மூன்று சிக்சர் அடங்கும்.



    குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்த வருடம் செஞ்சூரியனில் சாஹல் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஜோகிந்தர் சர்மா 2007-ல் டர்பனில் இங்கிலாந்திற்கு எதிராக 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்தில் உள்ளார். குருணால் பாண்டியா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×