search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் 5-வது வெற்றி பெருமா? பாட்னாவுடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் 5-வது வெற்றி பெருமா? பாட்னாவுடன் இன்று மோதல்

    புரோ கபடி லீக் போட்டியின் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தி 5-வது வெற்றியை தமிழ் தலைவாஸ் பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #ProKabbadi #TamilThalaivas
    அகமதாபாத்:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 7-வது கட்ட ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

    சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய 12-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் 27-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    அந்த அணி பெற்ற 4-வது வெற்றியாகும். நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஆட் டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 7 தோல்வி, 1 டையுடன் 25 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி 13-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது.

    பாட்னாவை வீழ்த்தி 5-வது வெற்றியை தமிழ் தலைவாஸ் பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    அஜய் தாகூரின் ரைடு மற்றும் மன்ஜித் சில்லாரின் டேக்கிளை பொறுத்துதான் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அஜய் தாகூர் 117 ரைடு புள்ளிகளுடன் இந்த சீசனில் 4-வது இடத்தில் உள்ளார். மஞ்சித் சில்லார் 40 டேக்கிள் புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    பாட்னா பைரேட்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 33 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. பர்தீப் நர்வால் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கிறார்.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ண்ட்ஸ் அணி 26-29 என்ற கணக்கில் தபாங் டெல்லியிடம் தோற்றது. இதன் மூலம் குஜராத் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் அரியானாவிடம் 25-32 என்ற கணக்கில் அரியானாவிடம் தோற்றது. அதன் பிறகு அந்த அணி விளையாடிய 9 ஆட்டங்களிலும் தோற்கவில்லை. 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஒன்றில் டை செய்தது.

    தற்போது அரியானாவுக்கு அடுத்தப்படியாக டெல்லியிடம் குஜராத் அணியிடம் வீழ்ந்து 2-வது தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த அணி 8 வெற்றி, 2 தோல்வி, 2 டையுடன் 48 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தில் இருக்கிறது.

    டெல்லி அணி 5 வெற்றி, 5 தோல்வி, 1 டையுடன் 33 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    குஜராத் அணி 13-வது ஆட்டத்தில் யு மும்பாவை இன்று இரவு 9 மணிக்கு எதிர்கொள்கிறது. #ProKabbadi #TamilThalaivas
    Next Story
    ×