search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட ‘டைவ்’ அடிப்பேன் - விராட் கோலி
    X

    இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட ‘டைவ்’ அடிப்பேன் - விராட் கோலி

    இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட ‘டைவ்’ அடிப்பேன் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvWI #ViratKohli
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 321 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

    அத்துடன் 157 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 150 ரன்னைத் தொடும்போது விராட் கோலி சேர்ந்து போய் இருந்தார். அப்போதும் கூட ரன்அவுட் ஆகாமல் இருக்க டைவ் அடைத்து க்ரீஸ் வந்தடைந்தார்.

    இந்த போட்டியின்போது 10 ஆயிரம் ரன்களை கடந்து, அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    போட்டி முடிந்து தனது சாதனை, இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து விரிவாக பேட்டியளித்தார். அப்போது இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட டைவ் அடிப்பேன் என்றார்.



    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எனது நாட்டிற்காக விளையாடுவது மிகப்பெரிய பெருமை. 10 ஆண்டுகள் விளையாடிய போதிலும், பெரிய அளவில் சாதித்ததாக நினைக்கவில்லை. நாட்டிற்காக சர்வதேச போட்டியில் விளையாடும்போது ஒவ்வொரு ரன்களுக்கும் கடினமாக உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    ஒரே ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றால் கூட, இந்திய அணிக்காக நான் அதை செய்வேன். இது என்னுடைய வேலை. நான் இந்திய அணியில் எதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது என்னுடைய வேலையில் ஒரு பகுதி’’ என்றார்.
    Next Story
    ×