search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: குஜராத் - அரியானா இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக்: குஜராத் - அரியானா இன்று மோதல்

    புரோ கபடி லீக்கில் குஜராத் - அரியானா, புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddi
    6-வது புரோ கபடி லீக் தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு அரியானா சோளிபட்டில் நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    குஜராத் அணி டெல்லிக்கு எதிராக ‘டை’ செய்தது. இதன் மூலம் அந்த அணி 3 புள்ளிகளுடன் உள்ளது. அரியானா தனது முதல் ஆட்டத்தில் தோற்றது. இரு அணிகளும் தங்களது 2-வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

    இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    புனேரி பால்டன் 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு ‘டை’ பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி ஒரு ‘டை’யுடன் 3 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
    Next Story
    ×