search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 தொடரில் பாகிஸ்தானை துவம்சம் செய்ய தயாராக இருக்கிறோம்- ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்
    X

    டி20 தொடரில் பாகிஸ்தானை துவம்சம் செய்ய தயாராக இருக்கிறோம்- ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்

    டி20 தொடரில் பாகிஸ்தானை துவம்சம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக் தெரிவித்துள்ளார். #PAKvAUS
    பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    டி20 போட்டிகள் 24-ந்தேதி (அபு தாபி), 26-ந்தேதி (துபாய்), 28-ந்தேதி (துபாய்)களில் நடக்கிறது. இதில் பாகிஸ்தானை துவம்சம் செய்வோம். அதற்கு நான் உதவிகரமாக இருக்க விரும்புகிறேன் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டேன்லேக் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் 2018 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர் பில்லி ஸ்டேன்லேக். 23 வயதாகும் இவர் நான்கு போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார். ஆனால் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஆனால், தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் இவர், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காக காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    6 ஒருநாள் மற்றும் 12 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பில்லி ஸ்டேன்லேக், பாகிஸ்தான் தொடர் குறித்து கூறுகையில் ‘‘நான் தற்போது ஏராளமான போட்டிகளில் விளைடியுள்ளேன். ஒருமுறை எந்த பிரச்சனையும் இல்லாமல் அதிக போட்டிகளில் விளையாடி விட்டால், அதன்பின் எளிதாகிவிடும்.

    அதிக போட்டியில் விளையாடினால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். என்னால் தொடர்ந்து விளையாட உடல் ஒத்துழைக்கும் என நம்புகிறேன்.



    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம். பாகிஸ்தான் அணி நம்பர் ஒன்னில் இருக்கிறார்கள். நாங்கள் அதை தட்டி பறிக்க முயல்வோம்.

    மூன்று பெரிய டி20 போட்டி காத்திருக்கிறது. நாங்கள் உண்மையிலேயே வலுவான அணியை பெற்றிருக்கிறோம். அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×