search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு இன்று பிறந்த நாள்
    X

    மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு இன்று பிறந்த நாள்

    20 வயதிற்குள் அதிக சர்வதேச விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள ரஷித் கானுக்கு இன்று பிறந்த நாள். #RashidKhan
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரஷித் கான். லெக்பிரேக் கூக்லி முறையில் பந்து வீசும் இவர், தனது மாயாஜால பந்து வீச்சால் உலகளவில் புகழ்பெற்றார். 2017 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது சுமார் 4 கோடிக்கு மேல் ஏலம் போன இவர், 2018 சீசனில் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போனார்.

    தற்போதைய நிலையில் உலகில நடக்கும் ஏராளமான டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி பிறந்த ரஷித் கான், 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி ஆப்கானிஸ்தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்.



    17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ரஷித் கானுக்கு இன்று பிறந்த நாள். அவர் 20 வயதை பூர்த்தி செய்து 21-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதுவரை ஒரேயொரு டெஸ்ட், 48 ஒருநாள், 35 டி20 போட்டிகளில் விளையாடி (2, 110, 64) 176 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    இதன்மூலம் 20 வயதிற்குள் அதிக சர்வதேச விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் வீரர்களுக்கான வக்கார் யூனிஸ் 125 விக்கெட்டுக்களும், முகமது அமிர் 99 விக்கெட்டுக்களும், அக்யூப் ஜாவித் 98 விக்கெட்டுக்களும், சக்லைன் முஷ்டாக் 97 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.
    Next Story
    ×