search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது- கெவின் பீட்டர்சன்
    X

    இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது- கெவின் பீட்டர்சன்

    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார். #SLvENG
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 4-1 என கைப்பற்றியது. அக்டோபர்- நவம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அலஸ்டைர் குக் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை தேட வேண்டியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை இல்லாமல் திணறி வந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜென்னிங்ஸ், ஆசிய கண்டத்தில் சரியாக விளையாடாத பிராட் ஆகியோரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘433 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் 32 வயதான ஸ்டூவர்ட் பிராட், சொந்த மண்ணை விட்டு வெளியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது கிடையாது.



    கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. அவரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கினால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்.

    இந்தியாவிற்கு எதிராக 9 இன்னிங்சில் ஜென்னிங்ஸ் 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரை நீக்க வேண்டும். ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரை தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×