search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    0.35 புள்ளி வித்தியாசத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய ஜிம்னாஸ்டிக் அணி
    X

    0.35 புள்ளி வித்தியாசத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய ஜிம்னாஸ்டிக் அணி

    ஆசிய விளையாட்டு போட்டியின் ஜிம்னாஸ்டிக்கில் இந்திய ஆண்கள் அணி 0.35 புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணிகளுக்கான ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடினார்கள்.

    இந்திய அணி ஒட்டுமொத்தமாக 229.95 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்தது. ஈரான் 230.30 புள்ளிகள் பெற்று 8-வது இடம் பிடித்தது. முதல் 8 இடங்கள் பிடித்த அணிகளே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்பதால் இந்திய அணி 0.35 புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

    ஆண்கள் ஒற்றையர் வால்ட் பிரிவில் யோகேஷ்வர் 10-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
    Next Story
    ×