search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி- எந்த வருத்தமும் இல்லை- ஏபி டி வில்லியர்ஸ்
    X

    ஓய்வு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி- எந்த வருத்தமும் இல்லை- ஏபி டி வில்லியர்ஸ்

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, அதில் எனக்கு துளியளவு வருத்தம் கூட இல்லை என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #ABD
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த டி வில்லியர்ஸ், பின்னர் நட்சத்திர பேட்ஸ்மேனாக மாறினார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா அதன்பின் ஆஸ்திரேலியா அணிகள் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. இந்தியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடரை 3-1 எனவும் தென்ஆப்பிரிக்கா கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் சர்வதேச மற்றும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    ஆனால், ஏபி டி வில்லியர்ஸ் அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். தேசிய அணிக்காக விளையாடும்போது புகழ் கிடைக்கும். என்றாலும் ஓய்வு பெற்றது மகிழ்ச்சியே. உண்மையிலேயே வருத்தப்படவில்லை என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ரசிகர்கள் தன்மீது வைத்திருக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பால், தாங்க முடியாத நெருக்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். தங்களுக்குள்ளாகவும், ரசிகர்கள் மூலமாகவும், நாட்டின் மூலமாகவும், பயிற்சியாளர் மூலமாகவும் ஒவ்வொரு வீரருக்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இது மிகப்பெரிய அளவில் வீரர்களின் மனநிலையில் அப்படியே இருக்கும்.

    மிகப்பெரிய போட்டியில் சதம் அடித்த உணர்வை வேறு எதனுடனும் ஒப்பிட ஒன்றுமில்லை என்பது எனக்குத் தெரியும். சதம் அடித்தமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெயரை குறிப்பிட்டு சந்தோசக் குரல் எழுப்புவார்கள். இதை நான் மிஸ் செய்யவில்ல. அணியில் இருந்து ஓய்வு பெற்றதால் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். உண்மையிலேயே எந்த வருத்தமும் இல்லை’’ என்றார்.
    Next Story
    ×