search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 சதவீதம் உடற்தகுதி இருந்தாலே விராட் கோலி விளையாட வேண்டும்- கவாஸ்கர்
    X

    50 சதவீதம் உடற்தகுதி இருந்தாலே விராட் கோலி விளையாட வேண்டும்- கவாஸ்கர்

    நடக்க முடியாது, வளைய முடியாது என்ற நிலை இல்லாமல் இருந்தால் கோலி கட்டாயம் விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது விராட் கோலி நீண்ட நேரம் பீல்டிங் செய்யவில்லை. முதுகு வலியால்தான் அவர் களம் இறங்கவில்லை.

    இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது அது தெளிவாக தெரிந்தது. விராட் கோலி முதுகு வலியுடன் விளையாடினார். லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்குப்பின் வொர்க் லோடு அதிகமானதால் அடிக்கடி முதுகு வலி வருகிறது. 3-வது டெஸ்டிற்கு ஃபிட் ஆகிவிடுவேன் என்றார்.

    இதனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் கோலி விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், 50 சதவீதம் ஃபிட் ஆக இருந்தாலும் அவர் விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலி அவரது காயத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். அது ரிஸ்க்காகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், நான் கேப்டனாக இருந்தால், 50 சதவிகிதம் ஃபிட் ஆக இருந்தாலும் விராட் கோலி விளையாட வேண்டும் என்று விரும்புவேன். அவர் இந்திய அணியின் முக்கிய துருப்புச் சீட்டு.

    அவரால் வளைய முடியாது அல்லது நடக்க முடியாது என்ற நிலை அல்லாத நிலையில் அவர் விளையாட வேண்டும். அவருடைய காயம் எப்படி இருக்கிறது. அதை சமாளித்துக் கொள்ளுமா? என்பதை அவரை முடிவு செய்ய வேண்டு். என்னைப் பொறுத்த வரையில் விராட் கோலி விளையாட வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×