search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    57 அணிகள் பங்கேற்கும் மாநில பள்ளி கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
    X

    57 அணிகள் பங்கேற்கும் மாநில பள்ளி கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

    57 அணிகள் பங்கேற்கும் மாநில பள்ளி கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் வேலம்மாள் (சென்னை), செயின்ட் அந்தோணி (தஞ்சாவூர்), செயின்ட் பீட்டர்ஸ் (சென்னை), காஜா மியான் (திருச்சி) உள்பட 37 அணிகளும், பெண்கள் பிரிவில் பாரதியார் (ஆத்தூர்), செயின்ட் ஜோசப்ஸ் (சென்னை), செயின்ட் மேரிஸ் (சேலம்), அரசு மேல்நிலைப்பள்ளி (ஈரோடு) உள்பட 20 அணிகளும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும். அத்துடன் போட்டியில் சிறந்து விளங்கும் 5 வீரர்கள், 5 வீராங்கனைகளுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு விருது வழங்கப்படும். இந்த விருதை பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் அளிக்கப்படும். நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் வருமான வரி கூடுதல் கமிஷனர் ஏ.சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    இந்த தகவலை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன் ஆகியோர் தெரிவித்தனர். 
    Next Story
    ×