search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியா போட்டியில் தென்கொரியா - வடகொரியா வீரர்கள் இணைந்து விளையாடுகிறார்கள்
    X

    ஆசியா போட்டியில் தென்கொரியா - வடகொரியா வீரர்கள் இணைந்து விளையாடுகிறார்கள்

    இருநாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் ஆசிய போட்டியில் கொரியா வீரர்கள் இணைந்து களம் இறங்குகிறார்கள். #AsianGames
    தென்கொரியாவில் சமீபத்தில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் வடகொரியா கலந்து கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது. இருநாட்டு உயர்அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட, ஐஸ் ஹாக்கி அணிகள் வடகொரியா, தென்கொரியா  இணைந்து களம் இறங்கும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இருநாட்டு வீரர்களும் ஒரே கலர் ஜெர்சி அணிந்து விளையாடினார்கள். அத்துடன் வடகொரியா அதிபர் தனது தங்கையை தென்கொரியா அனுப்பி வைத்திருந்தார்.

    கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதனால் தென்கொரியா - வடகொரியா இடையிலான சுமூகமான உறவு மேம்படும் என்று நம்பப்படுகிறது.

    இந்நிலையில் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா மற்றும் பலேம்பங்கில் ஆசிய போட்டி நடைபெறுகிறது.



    இதில் இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் இணைந்து விளையாட இருநாடுகளும் விரும்பியது. இதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அப்போது இருநாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இணைந்து விளையாட சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அத்துடன் கொரியா கூடைப்படைந்து தொடர் வடகொரியாவில் நடைபெறுகிறது. இதில் தென்கொரியா அணி கலந்து கொண்டு விளையாட சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
    Next Story
    ×