search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட்: பிளே- ஆப் சுற்றுக்கு 5 அணிகளிடையே கடும் போட்டி
    X

    ஐபிஎல் கிரிக்கெட்: பிளே- ஆப் சுற்றுக்கு 5 அணிகளிடையே கடும் போட்டி

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.#IPL2018
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றான பிளே-ஆப்புக்கு இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் ஆகிய 2 அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன.

    மற்ற இரண்டு அணிகள் யார் என்பது முடிவாகவில்லை. இதற்கு கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஏற்கனவே டெல்லி அணி வெளியேறி விட்டது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள 5 அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மட்டுமே எஞ்சி இருக்கிறது.

    தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 13 ஆட்டத்தில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை ஐதராபாத்துடன் மோதுகிறது. இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கொல்கத்தாவின் ரன்-ரேட் (-0.09) மோசமாக உள்ளது.

    நாளை போட்டியில் வென்றால் பிளே-ஆப்புக்கு 16புள்ளிகளுடன் சிக்கலின்றி தகுதி பெறும். தோற்றால் ரன்ரேட் இன்னும் குறைந்துவிடும். அதன்பின் மற்ற அணிகள் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

    ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 13 ஆட்டத்தில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. மும்பை கடைசி லீக் ஆட்டத்தில் 20-ந்தேதி டெல்லியுடன் மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அந்த அணிக்கு ரன்-ரேன் (+0.38) நன்றாக இருப்பதால் டெல்லிக்கு எதிராக வெற்றி பெற்றால் அடுத்து சுற்று வாய்ப்பை பிரகாசமாகும்.

    வீராட்கோலியின் பெங் களூர் அணியும் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். பெங்களூர் அணிக்கு ரன்ரேட் (+0.26) நல்ல நிலையில் இருப்பது சாதகமான வி‌ஷயம்.

    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரை கண்டிப்பாக வெல்ல வேண்டும். மேலும் ரன்ரேட் (-0.40) மோசமாக இருப்பதால் மிகப்பெரிய வெற்றி பெறுவது அவசியம்.

    அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 13 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. 20-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மேலும் ரன்ரேட்டை (-0.49) நல்ல நிலைக்கு கொண்டுவர மிகப்பெரிய வெற்றி அந்த அணிக்கு அவசியமாகிறது.#IPL2018
    Next Story
    ×