search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த வருடம் பாகிஸ்தானில் 8 முதல் 10 போட்டிகளை நடத்த இருக்கிறோம்- நஜம் சேதி
    X

    அடுத்த வருடம் பாகிஸ்தானில் 8 முதல் 10 போட்டிகளை நடத்த இருக்கிறோம்- நஜம் சேதி

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8 முதல் 10 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று நஜம் சேதி கூறியுள்ளார். #PCB #PSL
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ டி20 தொடரை நடத்தி வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே டி20 தொடரில் மட்டும் விளையாடியுள்ளது.

    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற சீசனின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கள் மற்றும் இறுதிப் போட்டியை பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. மேலும் உலக லெவன் அணிக்கெதிராக டி20 தொடரையும் பாகிஸ்தானில் நடத்தியதால் மற்ற அணிகளையும் பாகிஸ்தான் அழைக்க திட்டமிட்டுள்ளது.



    நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அதுபற்றி யோசித்து வருவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியது.

    இந்நிலையில் அடுத்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின்போது 8 முதல் 10 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி கூறியுள்ளார். இதனால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சர்வதேச போட்டிகளை காண வாய்ப்புள்ளது.
    Next Story
    ×