search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் 2018-19 ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் முழு விவரம்- பாக்சிங் டே டெஸ்ட் உண்டு
    X

    இந்தியாவின் 2018-19 ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் முழு விவரம்- பாக்சிங் டே டெஸ்ட் உண்டு

    இந்திய கிரிக்கெட் அணி 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றப் பயணம் செய்து விளையாடும் மூன்று வகை கிரிக்கெட்டிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடுகிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது.

    இந்நிலையில் 2018-19-ல் ஆஸ்திரேலியா விளையாடும் சர்வதேச போட்டிகளின் முழு அட்டவணையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதன்படி ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக மூன்று டி20 நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான மைதானம், தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நவம்பர் 1--ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான தொடர் தொடங்கி 2019 ஜனவரி 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதன்பின் டிசம்பர் 6-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 26-ந்தேதி மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டில் இநதியா விளையாடுகிறது. ஜனவரி 12-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா விளையாட இருக்கும் போட்டி அட்டவணை:-

    டி20 கிரிக்கெட் தொடர்

    நவம்பர் 21-ந்தேதி - முதல் டி20 - கப்பா
    நவம்பர் 23-ந்தேதி - 2-வது டி20 - மெல்போர்ன்
    நவம்பர் 25-ந்தேதி - 3-வது டி20 - சிட்னி

    டெஸ்ட் தொடர்

    டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி - முதல் டெஸ்ட் - அடிலெய்டு
    டிசம்பர் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி - 2-வது டெஸ்ட் - பெர்த்
    டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி - 3-வது டெஸ்ட் - மெல்போர்ன்
    ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி  - 4-வது டெஸ்ட் - சிட்னி

    ஒருநாள் போட்டி தொடர்

    ஜனவரி 12-ந்தேதி - முதல் ஒருநாள் போட்டி - சிட்னி
    ஜனவரி 15-ந்தேதி - 2-வது ஒருநாள் - அடிலெய்டு
    ஜனவரி 18-ந்தேதி - 3-வது ஒருநாள் - மெல்போர்ன்
    Next Story
    ×