search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் 4 பேரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
    X

    துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் 4 பேரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை

    அர்ஜுனா விருதுக்கு துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டைச் சேர்ந்த நான்கு வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. #NRAI #ArjunaAward

    புதுடெல்லி:

    சிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்திய தேசிய ரைபிள் கழகம் சார்பில் ஷ்ரேயாசி சிங், அங்கூர் மிட்டல், ஷாசர் ரிஸ்வி, பூஜா கத்கர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    அர்ஜுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு வில்விளையாட்டில் சிறந்த வீரராக கருதப்படும் அர்ஜுனனின் வெங்கலச்சிலையோடு, ரூ. 5,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.

    2001ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகள், உலக கோப்பை, உலக சாதனையாளர் துறைகள், கிரிக்கெட், இந்திய பரம்பரை விளையாட்டுகள், உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன

    இந்நிலையில், இந்தாண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு இந்திய தேசிய ரைபிள் கழகம் சார்பில் ஷ்ரேயாசி சிங், அங்கூர் மிட்டல், ஷாசர் ரிஸ்வி, பூஜா கத்கர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஷாசர் ரிஸ்வி சமீபத்தில் கொரியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றார். முன்னதாக மெக்சிகோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பையில் அறிமுகமான அவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.



    ஷ்ரேயாசி சிங், காமன்வெல்த் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வென்று அசத்தினார். அங்கூர் மிட்டல் மற்றும் பூஜா கத்கர் ஆகியோரும் துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்றனர். #ShreyasiSingh #AnkurMittal #ShahzarRizvi #PoojaGhatkar #ArjunaAward #NRAI
    Next Story
    ×