search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரமற்ற ஹெல்மெட் தயாரிப்பு- நிதின் கட்கரிக்கு சச்சின் வலியுறுத்தல்
    X

    தரமற்ற ஹெல்மெட் தயாரிப்பு- நிதின் கட்கரிக்கு சச்சின் வலியுறுத்தல்

    போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சச்சின் தெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடாவுளாக போற்றப்படும் இவர், தற்போது மேல்சபை எம்பி-யாக உள்ளார். இவர் போக்குவரத்தின் மூலமான ஏற்படும் விபத்து, உயிர்ப்பலிகளை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    சச்சின் தனது சொந்த ஊரில் சாலையில் செல்லும்போது இரு சக்கர வாகனங்களில் செல்லுவோர் ஹெல்மெட் இல்லாமல் சென்றால், அவர்களிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்துகிறார். இரு சக்கர வாகனங்கள் மூலமாகவே அதிக அளவில் விபத்து நடக்கிறது. சில சமயங்களில் ஹெல்மெட்டின் தரம் குறைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பலியாகும் நிலை ஏற்படுகிறது.

    இதனால் போலி ஹெல்மெட், தரம் குறைந்த ஹெல்மெட் தயாரிக்கும் நிறுனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நதின் கட்கரிக்கு கடிதம் மூலம் சச்சின் தெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.



    சச்சின் எழுதிய கடிதத்தில் ‘‘ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனங்கள் தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்துகிறது.மேலும் போலியான ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்தி விற்பனை செய்கிறது. இதற்கு உங்களுடைய அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கிறேன். ஒரு விளையாட்டு வீரராக நாங்கள் தரமான ஒரிஜினல் உபகரணங்களை பயன்படுத்துவது முக்கியமானது என்பதை புரிந்துகொள்வோம்.

    அதேபோல் இந்தியாவில் உள்ள சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஒரிஜினல் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவது முக்கியமானது. 2016-ல் 30 சதவீத விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×