search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்து சிக்சரை ரோகித் பார்க்கவில்லையாம்
    X

    தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்து சிக்சரை ரோகித் பார்க்கவில்லையாம்

    இறுதி ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்லும் என்று நினைத்து, பேடு அணிய சென்றதால் கடைசி பந்து சிக்சரை பார்க்கவில்லை என்று ரோகித் கூறியுள்ளார். #INDvBAN
    இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் விளாசியதால் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. கடைசி இரண்டு ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் விளாசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

    கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்றபோது பதற்றம் அதிக அளவில் காணப்பட்டது. ஒவ்வொருவரும் நகத்தை கடித்துக் கொண்டிருந்தனர்.

    சவுமியா சர்கார் வீசிய கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் டீப் கவர் திசையில் சிக்ஸ் அடித்தார். இதனால் இந்திய அணி யுனிட் சந்தோசத்தில் குதித்தார். அனைவரும் பந்தை எந்த திசையில் செல்கிறது என்பதை நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு தூக்கியதை நான் பார்க்கவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.



    போட்டிக்குப்பின் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி சிக்சரை நான் பார்க்கவில்லை. நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன். அதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து பேடு கட்டுவதற்காக டிரெஸ்ஸிங் அறைக்கு நடந்து கொண்டிருந்தேன்.

    ஆனால், தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்தது மிகப்பெரிய சந்தோசம். அவர் அதிக அளவில் விளையாட போதிலும், அவரது பவரை வெளிப்படுத்தினார்’’ என்றார்.
    Next Story
    ×