search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைதானத்தில் ரோபாவாக செயல்பட விரும்பமாட்டார்கள்- பிரெட் லீ
    X

    மைதானத்தில் ரோபாவாக செயல்பட விரும்பமாட்டார்கள்- பிரெட் லீ

    ரபாடா விவகாரத்தில் வீரர்கள் மைதானத்தில் ரோபாவாக செயல்பட முடியாது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். #SAvAUS
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் ரபாடா அபாரமாக பந்து வீசினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் ஸ்மித்தை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றிய ரபாடா, சந்தோசத்தில் ஸ்மித்தின் தோளோடு தோள் இடித்தார். இதனால் அவருக்கு மூன்று டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து டிமெரிட் புள்ளிகள் உள்ளதால் மொத்தம் 8 புள்ளிகள் பெற்று இரண்டு டெஸ்டில் விளையாட தடைபெற்றார்.

    ரபாடாவிற்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இதுகுறித்து பேசியுள்ளார்.



    ரபாடா விவகாரம் குறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘பொதுவாக கிரிக்கெட் மைதானத்திற்குள் ரோபாவாக செயல்பட முடியாது. அதேவேளையில் வீரர்கள் எல்லையை மீறக்கூடாது. இனரீதியில் யாரையும் அவமதிக்கக்கூடாது. குழந்தைகள் நம்முடைய நடைமுறையை பின்பற்றும் என்பதால் எல்லை மீறக்கூடாது. இவற்றைவிட கடினமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    தற்போது, என்ன நடந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று நான் சொல்லமாட்டேன், அதேபோல் என்ன நடந்தாலும் அந்த ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றும் சொல்லமாட்டேன். ஆனால், சர்ச்சைகளை தவிர்க்க பேட்ஸ்மேன்களை பந்து வீச்சாளர்கள் நேருக்குநேர் பார்க்கக்கூடாது, பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்களை பார்க்கக்கூடாது என்பதை நாங்கள் விரும்பவில்லை என்பதை என்னால் சொல்ல முடியும்’’ என்றார்.
    Next Story
    ×