search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    19-வது ஓவரில் 22 ரன்கள்- ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் ருபெல் ஹொசைன்
    X

    19-வது ஓவரில் 22 ரன்கள்- ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் ருபெல் ஹொசைன்

    9-வது ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து தோல்விக்கு காரணமாக இருந்த ருபெல் ஹொசைன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறியுள்ளார். #INDvSL
    இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. விஜய் சங்கர் மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    18-வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் மிகவும் அபாரமாக வீசினார். லெக் பை மூலம் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    இதனால் கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. சவுமியா சர்கார், ருபெல் ஹொசைன் ஆகியோருக்கு தலா ஒரு ஓவர் இருந்தது. சவுமியா சர்கார் முழு நேர பந்து வீச்சாளர் கிடையாது. ருபெல் ஹொசைன் முதல் மூன்று ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் விட்டுக்கொடுத்திருந்தார். இதனால் ஷாகிப் அல் ஹசன் அவரை 19-வது ஒவரை வீச அழைத்தார்.

    அனுபவ பந்து வீச்சாளர் என்பதால் அதிகபட்சம் 15 ரன்னுக்குள் விட்டுக்கொடுத்தாலும் கடைசி ஓவரில் 19 ரன்கள் என்பது கடினமானதாக இருக்கும். இதனால் வெற்றி பெற எளிதாக இருக்கும் என நினைத்து 19-வது ஓவரை ருபெல் ஹொசைனிடம் கொடுத்தார். அப்போதுதான் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் பந்தை எதிர்கொண்டார். தற்போதுதான் களம் இறங்கியுள்ளார் இதனால் அதிரடியாக விளையாடுவது கடினம் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பந்தை ருபெல் லோ புல் டாஸாக வீசினார். இதை லாங்-ஆன் திசையில் சிக்சராக மாற்றினார். 2-வது பந்தை அதே திசையில் பவுண்டருக்கு அனுப்பி, 3-வது பந்தை டி வில்லியர்ஸ் ஸ்டைலில் லெக்சைடு தூக்கி அடித்தார். 4-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காத தினேஷ் கார்த்திக் 5-வது இரண்டு ரன்னும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடித்தார்.

    இதன்மூலம் ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார் ரபெல் ஹொசைன். வங்காள தேச அணியின் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. முக்கியமான ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்த ருபெல் ஹொசைன் வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.



    இதுகுறித்து ருபெல் ஹொசைன் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு பயங்கரமானதாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். வங்காள தேச அணியின் தோல்விக்கு காரணமாக நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    நாங்கள் வெற்றியின் விளிம்பு வரை வந்தோம். ஆனால் என்னால் அணி தோல்வியை சந்தித்துவிட்டது. நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதேவேளையில் ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் பந்து வீசும்போது என்னுடைய திட்டத்தை மிஸ் செய்யவில்லை. புதிதாக வரும் பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலேயே சிக்ஸ், அதன்பின் பவுண்டரி, அதன்பின் சிக்ஸ் அடிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது’’ என்றார்.
    Next Story
    ×