search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோட்டர்டாம் ஓபன்: ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ரோட்டர்டாம் ஓபன்: ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #RotterdamOpen
    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். இதில் அரையிறுதி ஒன்றில் உலகத்தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவ், டேவிட் கோஃபினை எதிர்கொண்டார். பந்து கண்ணில் பட டேவிட் கோஃபின் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் டிமிட்ரோவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் இடத்தை பிடித்த ரோஜர் பெடரர் அன்ட்ரியாஸ் செப்பி என்பவரை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-6(3) என நேர்செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்றார். பெடரர் இறுதிப் போட்டியில் டிமிட்ரோவை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×