search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ஹசாரே டிராபியில் அசாம் அணியை 279 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பரோடா
    X

    விஜய் ஹசாரே டிராபியில் அசாம் அணியை 279 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பரோடா

    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அசாம் அணியை 99 ரன்னில் சுருட்டி 279 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணி அபார வெற்றி பெற்றது. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று ‘ஏ’ பிரிவில் மூன்று போட்டிகள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பரோடா - அசாம் அணிகள் மோதின. டாஸ் வென்ற அசாம் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பரோடா அணியின் தேவ்தார், வாக்மோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேவ்தார் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் வாக்மோட் 128 பந்தில் 17 பவுண்டரி, 4 சிக்சருடன் 148 ரன்கள் சேர்க்க பரோடா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் குவித்தது.

    பின்னர் 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அசாம் களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் அசிஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ஷர்மா 22 ரன்னில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள். இதனால் அசாம் 30 ஓவர்களே தாக்குப்பிடித்து 99 ரன்னில் சுருண்டது. பரோடா 279 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - ஒடிசா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹரியானா 170 ரன்னில் சுருண்டது. பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஒடிசா 31.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது ஆட்டத்தில் கர்நாடகா - ரெயில்வேஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 257 ரன்கள் எடுத்தது. பின்னர் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரெயில்வேஸ் 241 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் விக்கெட்டுக்களை இழந்ததால் கர்நாடகா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ‘ஏ’ பிரிவில் பரோடா 6 போட்டியில் 5 வெற்றிகளுடனும், கர்நாடகா 4 வெற்றிகளுடனும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
    Next Story
    ×