search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன்: வோஸ்னியாக்கி, ஹாலெப் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: வோஸ்னியாக்கி, ஹாலெப் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி, ஹலெப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்)-மெர்டனிஸ் (பெல்ஜியம்) மோதினார்கள்.

    இதில் வோஸ்னியாக்கி 6-3, 7(7)-6(2), என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.



    வோஸ்னியாக்கி இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 21-ம் நிலை வீராங்கனை கெர்பரை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய ஹாலெப் 2-வது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள். இதனால் இந்த செட் நீண்டு கொண்டே சென்றது. இறுதியில் ஹாலெப் 9-7 என 3-வது செட்டை கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    இறுதி போட்டியில் 2-ம் இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி உடன் 1-ம் நிலை வீராங்கனையான ஹாலெப் பலப்பரீட்சை நடத்துகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-ஹியான் சங் (தென்கொரியா), சிலிச் (குரோஷியா)-எட்மன்ட் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.
    Next Story
    ×