search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் மழையினால் தாமதம்
    X

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் மழையினால் தாமதம்

    கேப் டவுனில் நடைபெற்று வரும் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டம் மழையினால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்றுமுன்தினம் (5-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட காரணமாக இருந்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான மார்கிராம், டீன் எல்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். தென்ஆப்பிரிக்கா 52 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கிராம் 34 ரன்கள் நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட்வாட்ச்மேன் ஆக ரபாடா களம் இறங்கினார். டீன் எல்கர் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். ஹசிம் அம்லா - ரபாடா ஜோடி 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 4 ரன்னுடனும், ரபாடா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா 142 ரன் முன்னிலைப் பெற்றுள்ளது.

    நேற்றிரவு கேப் டவுனில் மழை பெய்தது. இதனால் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டது. மைதான ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் போட்டி சரியான நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்ட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. #SAvIND #INDvSA #CapeTown
    Next Story
    ×