search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது ஆஸி. வீரர்கள் பயப்படுகிறார்கள்: தலைமை பயிற்சியாளர்
    X

    இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது ஆஸி. வீரர்கள் பயப்படுகிறார்கள்: தலைமை பயிற்சியாளர்

    இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது ஆஸ்திரேலியா வீரர்களில் பெரும்பாலானோர் பயப்படுகிறார்கள் என்று இடைக்கால தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. தொடரில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத வகையில் கடுமையாக விளையாடும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தியா முதன்முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4-1 எனத் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

    மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான வீரர்கள் பயப்படுகிறார்கள் என்று இடைக்கால தலைமை பயிற்சியாளர் டேவிட் சாகேர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டேவிட் சாகேர் கூறுகையில் ‘‘நாங்கள் செய்ய முடியாத சில விஷயங்களை செய்ய முயற்சி செய்யும்போது ஆஸ்திரேலிய வீரர்களில் பெரும்பாலானோர் பயப்படுகிறார்கள். வீரர்கள் அதிக அளவில் சுதந்திரத்துடன் விளையாட நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால், போட்டியில் தோல்வியை சந்திக்கும்போது, பயத்துடன் விளையாடுகிறார்கள்.  இது மிகவும் மோசமானதல்ல. இதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். அணி வீரர்களிடம் திறமை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×