search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக பிரீமியர் லீக்: பெலகாவி பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
    X

    கர்நாடக பிரீமியர் லீக்: பெலகாவி பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

    கர்நாடக பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் பீஜப்பூர் புல்ஸ் அணியை வீழ்த்திய பெலகாவி பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    பெங்களூர்:

    கர்நாடக பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் பீஜப்பூர் புல்ஸ் அணியை வீழ்த்திய பெலகாவி பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    கர்நாடக பிரீமியர் லீக்கின் இறுதி ஆட்டம் ஹூப்ளியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பீஜப்பூர் புல்ஸ் மற்றும் பெலகாவி பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெலகாவி பாந்தர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பீஜப்பூர் புல்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. தொடக்க ஆட்டக்காரரான மொகமது தாஹா ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 99 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இறங்கிய அபிமன்யு மிதுன் மற்றும் சரத் ஜோடி 42 ரன்கள் சேர்த்தது. மிதுன் 14 ரன்களும், சரத் 12 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

    பெலகாவி பாந்தர்ஸ் அணி சார்பில் சுபாங் ஹெக்டே 2 விக்கெட்டும், பின்னி, அவினாஷ், கமாத், ஆனந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என பெலகாவி பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பரத்தும், ஹுவரும் இறங்கினர். அணியின் ஸ்கோர் 45 ரன்னாக இருந்தபோது 24 ரன்களில் பரத் அவுட்டானார். அதன்பின்னர் வந்த அப்பாஸும், சரத்தும் நீடிக்கவில்லை.

    ஆனால், தொடக்க ஆட்டக்காரரான ஹூவர் அதிரடி ஆட்டம் ஆடினார். 52 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரி விளாசிய அவர் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் பெலகாவி பாந்தர்ஸ் அணி 17. 3 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    பீஜப்பூர் புல்ஸ் அணி சார்பில் ரோனித், செகாவத் மற்றும் நெகியும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். சிறந்த ஆட்ட நாயகனாக ஹூவரும், தொடர் நாயகனாக ஸ்டூவர்ட் பின்னியும் தேர்வு செய்யப்பட்டனர்.
    Next Story
    ×