என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக லெவன் அணிக்கெதிரான டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
Byமாலை மலர்26 Aug 2017 12:46 PM GMT (Updated: 26 Aug 2017 12:46 PM GMT)
பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கும் உலக லெவன் அணிக்கெதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சோஹைல் கான் அணியில் இடம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் இணைந்து முயற்சி செய்து வந்தன.
இதன்பயனாக உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த மூன்று போட்டிகள் அடுத்த மாதம் 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் லாகூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்கான உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், டெஸ்ட் அணி கேப்டனும் ஆன டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சோஹைல் கான்
இந்நிலையில் உலக லெவன் அணிக்கெதிராக விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான் டி20 அணியில் சோஹைல் கான் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பிடித்திருந்தார். அதன்பின் சுமார் 6 ஆண்டுகள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சர்பிராஸ் அஹமது (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 2. பகர் சமான், 3. அஹமது ஷேசாத், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. உமர் அமின், 7. இமாத் வாசிம், 8. ஷதாப் கான், 9. மொகமது நவாஸ், 10. பஹீம் அஷ்ரப், 11. ஹசன் அலி, 12. அமிர் யாமின், 13. மொகமது அமிர், 14. ருமான் ரயீஸ், 15. உஸ்மான் கான், 16. சோஹைல் கான்,

Next Story
×