search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் தோல்வி: கர்ப்பிணி தங்கை செரீனாவிற்கு வீனஸின் உருக்கமான தகவல்
    X

    விம்பிள்டன் தோல்வி: கர்ப்பிணி தங்கை செரீனாவிற்கு வீனஸின் உருக்கமான தகவல்

    விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ், கர்ப்பிணியான தனது தங்கைக்கு உருக்கமான தகவலை தெரிவித்துள்ளார்
    இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரை நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் கர்ப்பிணியாக உள்ளதால் பங்கேற்காத செரீனா வில்லியம்ஸின் மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயின் நாட்டின் முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.

    இந்த போட்டிக்கு முன்பு, என தங்கை இல்லாத நேரத்தில் அவர் வெற்றி பெறக்கூடிய இந்த சாம்பியன் பட்டத்தை நான் வெல்வேன். முகுருசாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்று செரீனாவிடம் ஆலோசனைக் கேட்பேன் என்று வீனஸ் வில்லியம்ஸ் கூறியிருந்தார்.



    ஆனால், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 23 வயதாகும் முகுருசாவின் அபார ஆட்டத்திற்கு முன் 37 வயதாகும் வீனஸ் வல்லியம்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-7, 0-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.

    தோல்விக்குப்பின் தனது கர்ப்பிணி தங்கையான செரீனாவிற்கு உருக்கனமாக தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் உன்னை தவற விடுகிறேன் செரீனா. நீ செய்வதை நான் என்னுடைய சிறந்த முயற்சியால் செய்ய முயன்றேன். ஆனால், அதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.



    செரீனா வில்லியம்ஸ் கர்ப்பிணியாக இல்லாமல் இருந்திருந்தால், விம்பிள்டனில் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. அவர் இல்லாத இடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று வீனஸ் எண்ணியிருந்தார். தோல்வியடைந்ததால் இப்படி கூறியுள்ளார்.
    Next Story
    ×