search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்சமாம் உல் ஹக்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு: பாகிஸ்தான் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு
    X

    இன்சமாம் உல் ஹக்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு: பாகிஸ்தான் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு

    பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கபட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதுடன், பரிசு மழையும் குவிந்து வருகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் (பாகிஸ்தான் பண மதிப்பில்) பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அத்துடன் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், தலைமை தேர்வாளர் இன்சாமாம் உல் ஹக்கிற்கு 1 கோடி ரூபாயும், மற்ற தேர்வாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



    தற்போது இன்சமாம் உல் ஹக்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் இக்பால் காசிம் கூறுகையில் ‘‘தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கும்போது, தலைமை தேர்வாளருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என்றார்.

    ஏற்கனவே பரிசு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×