search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன?
    X

    மாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன?

    மகாரஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர், மாட்டு சாணியால் காரை முழுவதும் மொழுகி பயணம் மேற்கொள்கிறார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
    பூனே:

    அடிக்கிற வெயிலின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ன செய்வது என்பது தெரியாமல் நாம் அனைவரும் திணறிக் கொண்டிருக்கிறோம். வீட்டில் மின்விசிறி போதவில்லை.  ஏசி, ஏர்கூலர் அறைகளில் இருந்து விட்டு, வெளியே வந்தால், ஏன் வெளியே வருகிறோம் எனும் எண்ணம் வந்து விடுகிறது. ஓரிடத்தில் வெளியில் 10 நிமிடம் கூட நிற்க முடிவதில்லை. உடலெங்கும் வியர்வை குளித்தது போன்ற பிம்பத்தையே உருவாக்கி விடுகிறது.

    பைக்கில் பயணம் செய்தால் காற்று வரும் என நினைத்தால், பைக்கின் சீட் அடுப்பை போல் கொதிக்கிறது. வீசும் அனல் காற்றோ கண்களையே எரித்துவிடுவது போல இருக்கிறது. இந்த கொடுமையான வெயிலில் இருந்து விடுபட, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷேஜல் ஷா, வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.



    ஷேஜல் தன்னுடைய கார் முழுவதும் மாட்டு சாணத்தால் மொழுகியுள்ளார். மாட்டு சாணத்தால் காரின் மேற்பரப்பை மூடும்போது காரின் உள்ளே வரும் வெப்ப காற்று கனிசமாக தடுக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும் காரில் பயணம் செய்யும்போது அனல் நம் மீது வீசாது. மேலும் காரின் சீட் சூடேறாமல் இருக்கும் என கூறியுள்ளார்.

    நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதும், ஒரு காலத்தில் வீடுகளே சாணத்தால் மொழுகப்பட்டு கட்டப்பட்டிருந்ததற்கும் காரணம் என்ன என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கும்.






    Next Story
    ×