search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
    X

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #CBSE #CBSE10thResults
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்கு முன்னதாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய கல்வி வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மே மாதம் 3-வது வாரத்தில் வெளியாக வேண்டிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன.

    இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவையும் முன்கூட்டியே வெளியிட திட்டமிடப்பட்டது. வழக்கமாக பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த ஒரு வாரத்தில் 10-ம் வகுப்பு முடிவு வெளிவரும். அதன்படி மே 5-ம் தேதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல் கசிந்தது. ஆனால், தேர்வு முடிவு வெளியாகவில்லை.

    இந்நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் cbseresults.nic.in அல்லது cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக, மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 27 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு முடிந்த 38 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  #CBSE #CBSE10thResults 
    Next Story
    ×