search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து - அப்பாவிகள் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது
    X

    16 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து - அப்பாவிகள் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது

    கொலை மற்றும் கற்பழிப்பு குற்றத்தில் கைதாகி 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம் நாசிக்கில் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 5 பேரை கொலை செய்துவிட்டு பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் 2 பெண்களை கற்பழித்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த மராட்டிய மாநிலம் நாடோடி இனத்தை சேர்ந்த ஆங்குஷ் மாருதி ஷிண்டே, ராஜ்யா அப்பா ஷிண்டே, அம்பாதாஸ் லஷ்மண் ஷிண்டே, ராஜுமாசு ஷிண்டே, பாபுஅப்பா ஷிண்டே மற்றும் சூர்யா என்ற சுரேஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கில் செசன்சு கோர்ட்டு அவர்கள் 6 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. ஐகோர்ட்டும் அந்த தண்டனையை உறுதி செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு தண்டனையை உறுதிசெய்தது.

    அவர்கள் 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல்நசீர், எம்.அர்.ஷா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    6 பேரும் அப்பாவிகள், அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி குற்றவாளிகள் தரப்பில் வக்கீல்கள் வாதாடினார்கள்.

    இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.

    6 பேரும், போலீசாரால் ஜோடிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல. அப்பாவிகள். ஆனால் குற்றத்தை 4 பேர் செய்திருக்கிறார்கள். அவர்கள் யார் என சரியாக விசாரிக்கவில்லை.எனவே மறுபடியும் விசாரணை நடத்த வேண்டும்.

    இதுசம்பந்தமாக சாட்சியம் அளித்ததை கூட சரியாக போலீசார் விசாரிக்காமல் விட்டுள்ளனர். போலீசார் அலட்சியமாக நடந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் மீது 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குற்றவாளிகளாக சேரக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் அப்போது சிறுவன் ஆவார். அதைக்கூட கண்டுகொள்ளாமல் வயதை மாற்றி குறிப்பிட்டு வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். 6 பேரும் தனிமை சிறையில் இருந்ததால் அவர்களுடைய மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே 6 பேரையும் உடனடியாக விடுவிப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் மராட்டிய அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தீர்ப்பில் கூறினார்கள்.

    மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு கொடூரை கொலை தொடர்பாக மரண தண்டனை பெற்ற 2 பேருக்கும் தண்டனையை ரத்து செய்து இதே நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறினார்கள். #tamilnews
    Next Story
    ×