search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு ராணுவ ஆராய்ச்சி மையத்தில் அப்துல் கலாம் சிலை - நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்
    X

    பெங்களூரு ராணுவ ஆராய்ச்சி மையத்தில் அப்துல் கலாம் சிலை - நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

    பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாரமன் இன்று திறந்து வைத்தார். #NirmalaSitharaman #APJKalam
    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவரது அரிய முயற்சிகளால் அக்னி, பிரிதிவி, பிரமோஸ் உள்ளிட்ட பல்வேறு நவீனரக ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமரர் அப்துல் கலாம் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாரமன் இன்று திறந்து வைத்தார்.



    டி.ஆர்.டி.ஓ. என்றழைக்கப்படும் இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பெயரால் அமைந்துள்ள டி.ஆர்.டி.ஓ. மாடல் சிட்டி (மாதிரி நகரம்) பகுதியில் அப்துல் கலாம் நல்லெண்ணப் பூங்காவையும் திறந்து வைத்த நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவத்துறையின் வளர்ச்சிக்கு அப்துல் கலாம் ஆற்றிய மிகப்பெரிய நினைவுகூர்ந்து, அவருக்கு புகழாரம் சூட்டினார். #NirmalaSitharaman #APJKalam #AbdulKalamstatue #AbdulKalamDRDO
    Next Story
    ×